ஆப்பிரிக்க நாடுகளின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஐ.நா பொதுச் செயலாளர் António Guterres பாராட்டியுள்ளார். கொரோனா பாதிப்பால் உலகளவில் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
பொருளாதாரம் மற்றும் சுகாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடுகள் கூட கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில் ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்புகள் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருப்பதாக ஐ.நா பொதுச் செயலாளர் António Guterres தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்க கண்டத்தில் 88,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், 3,000க்கும் குறைவான உயிரிழப்புகள் தான் பதிவாகியுள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் மிக மிக குறைவாக இருக்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஐ. நா பொதுச் செயலாளர் António Guterres பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம், சுகாதாரத்தில் வலிமையான நாடுகள் கூட ஆப்பிரிக்க நாடுகளின் நடவடிக்கைகளை பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று மேலும் கூறியுள்ளார். வளர்ந்த நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி பாதிப்பை கட்டுப்படுத்த தவறி விட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஐ.நா கணித்ததை விட ஆப்பிரிக்காவில் கொரோனா தாக்கம் குறைவாகதான் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.