கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 865 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன. கொரோனா தொற்று நாட்டில் தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் இதுவாகும் என்று NTB எழுதியுள்ளது.
இதுவரை, அமெரிக்காவில் 4,000 க்கும் மேற்பட்டோர் வைரஸால் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.100,000 முதல் 200,000 வரையிலானோர் அமெரிக்காவில் இறக்கும் வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
“அடுத்த சில வாரங்கள் கடினமாக இருக்கும்” என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை இரவு வெள்ளை மாளிகையின் செய்தியாளர் கூட்டத்தில் கூறியுள்ளார்.