கொரோனா அமெரிக்கா : ஒரே நாளில் 2,000 க்கும் மேற்பட்ட இறப்புகள்!

  • Post author:
You are currently viewing கொரோனா அமெரிக்கா : ஒரே நாளில்  2,000 க்கும் மேற்பட்ட இறப்புகள்!

கொரோனா வைரஸால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப் பட்டு வருகின்றது . அமெரிக்கா அரை மில்லியனுக்கும் அதிகமான தொற்று நோய்களைக் கடந்துவிட்டது. வெள்ளிக்கிழமை மட்டும் , 2,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன.

Johns Hopkins பல்கலைக்கழக கணக்கெடுப்பின்படி, அமெரிக்காவில் 2074 இறப்புகள் வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ளன, இது நாட்டில் கொரோனா தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து அதிகமான எண்ணிக்கையாகும் என்று CNN எழுதியுள்ளது .

கொரோனா அமெரிக்கா : ஒரே நாளில் 2,000 க்கும் மேற்பட்ட இறப்புகள்! 1

அமெரிக்காவில், வைரஸ் தோற்றால் மொத்தம் 18,777 பேர் இறந்துள்ளனர்.

மிகக் கடுமையான பாதிக்கப்படட நியூயார்க் மாநிலத்தில், கொரோனா வைரஸால் 5820 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மொத்தம் 174,498 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். Johns Hopkins பல்கலைக் கழகத்தின் கூற்றுப்படி, அமெரிக்காவைத் தவிர உலகின் வேறு எந்த ஒரு நாட்டிலும் இதைவிட அதிகமான நோய்த்தொற்று க்கள் இல்லை! .

மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள