கொரோனா இந்தியா ; இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 72 ஆக உயர்வு!

  • Post author:
You are currently viewing கொரோனா இந்தியா ;  இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 72 ஆக உயர்வு!

இந்தியா முழுவதும் மக்களிடையே கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகின்றது. மேலும், கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது. கடந்த மார்ச் 24ந் திகதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்று நள்ளிரவு முதல் வரும் 14ந் திகதி வரை இந்த உத்தரவு அமுலில் இருக்கும்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனா பாதித்தோரில் அதிக எண்ணிக்கையுடன் மராட்டியம் முதல் இடத்திலும், தமிழகம் 2வது இடத்திலும், கேரளா 3வது இடத்திலும் உள்ளன.

இதேபோன்று பாதித்தோர் எண்ணிக்கை 2,567 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சிகிச்சை பெற்றோரில் வீடு திரும்பியோர் எண்ணிக்கை 192 ஆக உயர்ந்துள்ளது.

பகிர்ந்துகொள்ள