கொரோனா இந்தியா : கடந்த 24 மணி நேரத்தில் 991 பேருக்கு கொரோனா தொற்று!

  • Post author:
You are currently viewing கொரோனா இந்தியா : கடந்த 24 மணி நேரத்தில் 991 பேருக்கு கொரோனா தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 991 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 991 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சுகாதாரத்துறை அமைச்சக இணைச்செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-
“ கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1992 பேர் மீண்டுள்ளனர். குணம் அடைந்தோர் சதவிகிதம் 13.85 ஆக உள்ளது. அதேபோல், கொரோனோ பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,378 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 480 ஆக அதிகரித்துள்ளது.

நம் நாட்டில் இறப்பு விகிதம் சுமார் 3.3 சதவீதம். 0-45 வயதிற்குட்பட்டவர்களில் 14.4% மரணம் பதிவாகியுள்ளது. 45-60 வயதுக்கு உட்பட்டோர் இறப்பு விகிதம் 10.3%, ஆகும், 60-75 வயதிற்கு இடையில் இது 33.1% மற்றும் 75 வயதுக்கு மேல் 42.2% ஆகவும் உள்ளது” என்று தெரிவித்தார்.

பகிர்ந்துகொள்ள