உலகளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 10 நாடுகளில் ஈரானும் உள்ளது. இந்த நிலையில் அங்கு கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது.
இது குறித்து ஈரான் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் “Kianush Jahanpur” கூறுகையில், “கடந்த 24 மணி நேரத்தில் 73 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. எனினும் முந்தைய நாட்களை ஒப்பிடுகையில் இறப்பு விகிதம் குறைய தொடங்கி உள்ளது” என கூறினார்.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்து 868-ஐ கடந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதே சமயம் இதுவரை 55 ஆயிரத்து 987 பேர் கொரோனா வைரசில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக “Kianush Jahanpur” கூறினார்.