இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ), முழு உடல் கிருமிநாசினி அறை மற்றும் கொரோனா வைரஸுடன் போராடும் நாட்டின் சுகாதார நிபுணர்களுக்காக ஒரு சிறப்பு முக பாதுகாப்பு கவசத்தை வடிவமைத்துள்ளது.
பி.எஸ்.இ எனப்படும் டி.ஆர்.டி.ஓ உருவாக்கிய அறை ஒரு சிறிய அமைப்பு. அதில் சானிடிசர் மற்றும் சோப் டிஸ்பென்சர் பொருத்தப்பட்டிருக்கும், இது சுகாதார ஊழியர்களை தூய்மைப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது, ஒருவர் பின் ஒருவாக இதற்குள் செல்ல வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அறையின் நுழைவாயிலில் கால் மிதி பயன்படுத்தி தூய்மையாக்குதல் செய்யப்படுகிறது. அறைக்குள் நுழையும் போது, மின்சாரம் மூலம் இயக்கப்படும் பம்ப் சோடியம் ஹைபோகுளோரைட்டின் கிருமிநாசினி மூடுபனியை உருவாக்குகிறது. மூடுபனி தெளிப்பு 25 விநாடிகளுக்கு அளவீடு செய்யப்படுகிறது மற்றும் தானாகவே செயல்பாட்டை நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிருமி நீக்கம் செய்யப்படும் பணியாளர்கள் அறைக்குள் இருக்கும்போது கண்களை மூடிக்கொண்டு இருக்க வேண்டும்.
மறு நிரப்புதல் செய்யப்படுவதற்கு முன்பு கிட்டத்தட்ட 650 பணியாளர்கள் கிருமி நீக்கம் செய்ய அறை வழியாக செல்ல முடியும். இந்த அமைப்பு கூரை பொருத்தப்பட்ட மற்றும் மொத்தம் 700 லிட்டர் திறன் கொண்ட கீழ் தொட்டிகளை கொண்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அமைப்பின் இருபக்க சுவர்களில் பார்க்கக்கூடிய கண்ணாடி பேனல்களைக் கொண்டுள்ளது, மேலும் இது கண்காணிப்பு நோக்கத்திற்காக இரவுநேர நடவடிக்கைகளின் போது ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது என இராணுவத்தின் ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.