ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோணியா குத்ரோஸ் (António Guterres) கூறும் போது உலக சுகாதார அமைப்பிற்கோ அல்லது தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் வேறு எந்த அமைப்பிற்கோ நிதியைக் குறைப்பதற்கு தகுந்த நேரம் இதுவல்ல என கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பான விவகாரத்தில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக உலக சுகாதார நிறுவனத்திற்கு நிதியளிப்பதை தற்காலிகமாக நிறுத்துமாறு டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தனது நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் (Donald Trump)கூறியதாவது:-
அமெரிக்க அளிக்கும் நிதியை உலக சுகாதார நிறுவனம் சிறந்த பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதா என்பது குறித்து தனக்கும் தனது அரசாங்கத்திற்கும் ஆழ்ந்த கவலைகள் உள்ளது.
உலக சுகாதார அமைப்பு அதன் அடிப்படை கடமையில் தோல்வியுற்று உள்ளது, அதற்கு அதுவே பொறுப்பேற்க வேண்டும். கொரோனா பரவல் தொடர்பில் சீனா அளித்த தவறான தகவல்களை அந்த அமைப்பு முன்னிலைப்படுத்தி உள்ளது.
இல்லை எனில் உலக நாடுகள் கண்டிப்பாக கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கும். சுகாதார அச்சுறுத்தல்கள் குறித்த துல்லியமான தகவல்கள் சரியான நேரத்தில் பகிரப்படுவதை உறுதிசெய்ய நாடுகளுடன் இணைந்து பணியாற்ற உலக சுகாதார அமைப்பை உலகம் சார்ந்துள்ளது. அதன் வெளிப்படையான தோல்விகளுக்கு அமைப்பு பொறுப்பேற்க வேண்டும். ஆனால் அர்த்தமுள்ள சீர்திருத்தங்கள் தொடர அமெரிக்கா அந்த அமைப்புடன் தொடர்ந்து கைகோர்க்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்திற்கு நிதியளிப்பதை தற்காலிகமாக நிறுத்துமாறு டொனால்ட் டிரம்ப் தனது நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து சுகாதார அமைப்பு எந்த பதிலையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
இது குறித்து ஐநா பொதுச்செயலாளர் அந்தோணியா குத்ரோஸ் கூறும் போது உலக சுகாதார அமைப்பிற்கோ அல்லது தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் வேறு எந்த அமைப்பிற்கோ நிதியைக் குறைப்பதற்கு இது தகுந்த நேரம் அல்ல.
இந்த வைரஸையும் அதன் விளைவுகளையும் தடுக்க ஒற்றுமைக்காகவும் சர்வதேச சமூகம் ஒற்றுமையுடனும் இணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது என கூறி உள்ளார்.