கொரோனா ஒழிப்பு செயற்பாட்டிற்கான இணைப்பதிகாரிகளாக அனைத்து மாவட்டங்களுக்கும் தலா ஒரு இராணுவ உத்தியோகத்தர் என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிறீலங்கா படைத்தளபதியின் பதவி உயர்த்தப்பட்டுள்ளதை தொடர்ந்து படையினரின் ஆட்சியிலேயே சிறீங்கா காணப்படுகின்ற நிலையில் மேலும் படையினரின் நிர்வாக கட்டமைப்புக்களை சிவில் சமூகத்திற்குள் திணிக்கும் நடவடிக்கையினை அரசுமேற்கொண்டு வருகின்றது அதன் ஒரு கட்டமாகவே இந்த செயற்பாடும் இடம்பெற்றுள்ளது.
மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார துறையினருடன் இணைந்து இன்று முதல் இந்த இராணுவ உத்தியோகத்தர்கள், COVID – 19 ஒழிப்புக்கான தேசிய செயலணியுடன் செயலாற்றவுள்ளனர்.
மாவட்ட ரீதியில் தனிமைப்படுத்தல் நிலையங்களை பராமரித்தல், மருந்துகள், மருத்துவ வசதிகளை பெற்றுக் கொடுத்தல், நோயாளர்களை வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லுதல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளும் புதிய இணைப்பதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.