கொரோனா ஒஸ்லோ : ஒஸ்லோவில், அதிக தொற்று கண்டறியப்பட்ட பகுதி!

  • Post author:
You are currently viewing கொரோனா ஒஸ்லோ : ஒஸ்லோவில், அதிக தொற்று  கண்டறியப்பட்ட பகுதி!

ஒஸ்லோவில் உள்ள, மக்கள் தொகையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, Stovner பகுதியில்தான் அதிக கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவுசெய்யப்பட்ட தொற்றுநோய்களின் பட்டியலில் Stovner பகுதி முதலிடத்தில் உள்ளது. 10,000 மக்களுக்கு 42.9 தொற்றுக்கள் இங்கு பதிவாகி உள்ளன.

ஏப்ரல் 13, ஒஸ்லோ நகராட்சியில் உள்ள சுகாதார அமைச்சின் ஒரு அறிக்கையில், ஒஸ்லோவில் வாழும் 10,000 மக்களுக்கு சராசரியாக 27 நோய்த்தொற்றுகள் உள்ளன என்றும் இது நாடு முழுவதிலும் சராசரி 12 ஆக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

பதிவுசெய்யப்பட்ட, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்பது, பெரும்பாலும் எத்தனை பேர் மற்றும் யார் பரிசோதிக்கப் படுகின்றார்கள் என்பதற்கான ஒரு வெளிப்பாடே என்றும், ஆகவே இந்த புள்ளிவிவரங்கள் உண்மையான தொற்று எண்ணிக்கையை பிரதிநிதித்துவப் படுத்துவதாக அமையாது என்றும் சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
மேலும், இங்கு பெரிய இருண்ட புள்ளிவிவரங்கள் இருக்கலாம் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள