இந்த வார தொடக்கத்தில், ஒஸ்லோவில் உள்ள Diakonhjemmet மருத்துவமனையில் ஒருவர் இறந்துள்ளார். இறந்தவர் கொரோனா தொற்று காரணமாக இறந்துள்ளார் என்று மருத்துவமனை இப்பொழுது தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் இறந்துள்ளார் என்பதை எம்மால் உறுதிப்படுத்த முடியும். ஆனால், தனியுரிமை காரணங்களுக்காக, இது தொடர்பாக மேலதிக கருத்துக்களை தெரிவிக்க முடியாதுள்ளது என்று Diakonhjemmet மருத்துவமனையின் தகவல் தொடர்பு மேலாளர் Pernille Lønne Mørkhagen கூறியுள்ளார்.