New York மிருகக்காட்சி சாலையில் உள்ள ஒரு மலேசிய புலி கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் ஆறு புலிகள் மற்றும் சிங்கங்களும் பாதிக்கப்படலாம் என்று நம்பப்படுகின்றது.
விலங்குகள் அனைத்தும் மோசமான நிலையில் உள்ளன என்றும் மேலும், மிருகக்காட்சிச்சாலை ஊழியர்கள் மூலம் கொரோனா தொற்றியிருக்கலாம் என்று நம்புவதாயும் அமெரிக்க வேளாண்மைத் துறை கூறியுள்ளது .
“Bronx மிருகக்காட்சிசாலையில் 4 வயதான மலேசிய புலியான “நாடியா“வுக்கு , கோவிட் -19 சோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. நாடியா மற்றும் அதன் சகோதரி “அசுல்“, மேலும் இரண்டு சைபீரிய புலிகள் மற்றும் மூன்று ஆப்பிரிக்க சிங்கங்கள் வறட்டு இருமலை கொண்டிருந்தன என்றும், விரைவில் குணமடையும் வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்ப்பதாயும்” மிருகக்காட்சிசாலையின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்: Dagbladet