கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரத்யேகமாக 9 நாட்களில் சீனா மருத்துவமனை ஒன்றை கட்டியது. சுமார் ஆயிரம் படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சீனாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் கணிசமாக குறைந்து வருகின்றது. உகான் நகரில் கட்டப்பட்ட சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடைசி நோயாளியும் உடல் நலம் பெற்று வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த மருத்துவமனை மூடப்பட்டது.