கொரோனா சென்னை : இயந்திர மனிதன் மூலம் கண்காணிக்கும் புதிய முயற்சி!

  • Post author:
You are currently viewing கொரோனா சென்னை : இயந்திர மனிதன் மூலம் கண்காணிக்கும் புதிய முயற்சி!

கொரோனோ பாதிப்பின் காரணமாக தடை செய்யப்பட்ட பகுதிகளை இயந்திர மனிதன் (Robot) மூலம் கண்காணிக்கும் புதிய முயற்சியை சென்னை காவல்துறை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை செய்வது மட்டுமின்றி நோய்ப் பரவல் குறித்த அறிவுரைகளையும் எளிதில் வழங்கலாம்.

தோலை இயக்கி (remote control) மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரம் வழியாக 200 மீட்டர் வரையில் கண்காணிக்க முடியும். ஊரடங்கு தீவிரமாகக் கடைபிடிக்கப்படும் பகுதிகளிலுள்ள வீடுகளில் இருந்து பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே நடமாடினால் இயந்திர த்தில் பொருத்தப்பட்டுள்ள ஒளிப்படக்கருவி வாயிலாக மக்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதோடு, அபாய ஒலி எழுப்பி பொதுமக்களை எச்சரிக்கை செய்ய முடியும்.

செயலி மூலம் இயந்திர மனிதனின் இயக்கத்தைக் கண்காணிப்பதோடு, இருக்கும் இடத்தில் இருந்தே அதைப் பயன்படுத்தி காவல்துறையினர் பேசக்கூடிய வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை செய்வது மட்டுமின்றி நோய்ப் பரவல் குறித்த அறிவுரைகளையும் எளிதில் வழங்கலாம்.

மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு தற்போது தனியார் நிறுவனம் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று சென்னை மயிலாப்பூரில் கொரோனோ நோய்ப் பரவலால் தடைசெய்யப்பட்டுள்ள மீனாட்சிபுரம் பகுதியில் இயந்திர மனிதனைக் கொண்டு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. காவல் துறையினரின் நலன் கருதி 5 நாளில் இந்த இயந்திர மனிதனை உருவாக்கியதாக தனியார் நிறுவனத்தினர் கூறுகின்றனர்.

பகிர்ந்துகொள்ள