தவக்கால பண்டிகைக்குப்பின், டென்மார்க் சிறிது சிறிதாக மீண்டும் வழமைக்கு திரும்பவுள்ளது என்று பிரதமர் Mette Frederiksen இன்று திங்கள் இரவு செய்தியாளர் கூட்டத்தில் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், மழலையர் பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளியின் குழந்தைகளை ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் மீண்டும் பள்ளிக்கு அனுப்பத் தொடங்கலாம் என்று கூறியுள்ளார்.
எல்லோரும் ஒரே நேரத்தில் பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகளுக்கு செல்லக்கூடாது, மேலும் இது படிப்படியாகவே நடைமுறைக்கு வரும் என்றும், அதே நேரத்தில், பள்ளி மற்றும் மழலையர் பள்ளிகளில் அன்றாட நடைமுறை, வழமையை விட வித்தியாசமாகவே இருக்கும், குழந்தைகள் முடிந்தவரை கூடுதலாக வெளியே இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
மேலதிக தகவல்: NRK