நோர்வேயில் “கொரோனா” தடுப்புமருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாடளாவிய அளவில் இதுவரை “கொரோனா” தடுப்புமருந்து ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்டதாக 77 பேரின் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, இவர்களில் 53 பேருக்கு “Astra Zeneca” கொடுக்கப்பட்டாகவும், 11 பேருக்கு “Pfizer” கொடுக்கப்பட்டதாகவும், 6 பேருக்கு “Moderna” கொடுக்கப்பட்டதாகவும், மிகுதி 7 பேருக்கும் என்னவிதமான தடுப்புமருந்து கொடுக்கப்பட்டது என்பதில் தெளிவற்ற நிலையே இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட 77 பேரில் 8 பேர் மரணமாகியுள்ள நிலையில், மரணமானவர்களால், பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் ஏற்பட்டிருக்கக்கூடிய பொருளாதார இழப்புக்களை கருத்தில் கொண்டே மேற்படி இழப்பீடுகள் வழங்கப்பட இருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.