ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள், “கொரோனா” தடுப்பு மருந்து வழங்கலுக்கான ஒப்பந்தமொன்றினை “AstraZeneca” என்ற நிறுவனத்ததுடன் செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. “கொரோனா” தடுப்பு மருந்து தொடர்பில் ஐரோப்பிய ரீதியில் செய்யப்பட்ட முதலாவது ஒப்பந்தம் இதுவாகும்.
மேற்படி “கொரோனா” தடுப்பு மருந்து தயாரிப்பு இன்னமும் முழுமையடையவில்லை எனினும், அனைத்தும் திட்டப்படி வெற்றியளிக்குமானால் இவ்வருடத்தில் இறுதிக்குள் மேற்படி இந்நாடுகளுக்கு தடுப்பு 300 மில்லியன் மருந்து குடுவைகள் விநியோகிக்கப்படுமென ஜெர்மனியின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மருந்து குடுவைகள் விநியோகத்துக்கு தயாராகும்போது, மேற்படி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருக்கும் நாடுகளின் சனத்தொகை பரம்பலுக்கேற்ப அவை பகிர்ந்தளிக்கப்படுமெனவும், மேலும் வேறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இவ்வொப்பந்தத்தில் இணைந்துகொள்ளலாமெனவும் ஜெர்மனி தெரிவித்துள்ளது.