டென்மார்க்கில், கூட்டங்களில் கூடுவோர் எண்ணிக்கையை 500 ஆக விரிவாக்கவுள்ளதாக இன்று செவ்வாயன்று, டென்மார்க்கின் சுகாதார அமைச்சர் “DK” பத்திரிகைக்கு கூறியுள்ளார்.
இன்றைய நிலவரப்படி, அதிகபட்சம் 10 பேருக்கு இந்த வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிகபட்சம் 500 பேர் வரை கூடலாம் என்ற இந்த புதிய நடவடிக்கை, மே 10 முதல் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படும் என்றும், முதல் கட்டமாக இது செப்டம்பர் 1 வரை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த முடிவு, சுகாதார அதிகாரிகளின் மதிப்பீட்டின் விளைவாகும். இது இன்னும் நிச்சயமற்றது. அடுத்த சில மாதங்களில், டென்மார்க்கில் கொரோனா தொற்றுநோய் எவ்வாறு இருக்கும் என்பதைப் பொறுத்து முடிவுகள் பரிசீலிக்கப்படும் என்று டென்மார்க்கின் சுகாதார அமைச்சர் பத்திரிகைக்கு மேலும் கூறியுள்ளார்.