பாதிக்கப்பட்ட, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மற்றும் மோசமாக நோய்வாய்ப்பட்டவர்களின் எண்ணிக்கை டென்மார்க்கில் தொடர்ந்து குறைந்து வருகின்றது.
ஆதலால், ஆரம்பத்தில் திட்டமிட்டதை விட முன்னதாக நாட்டை படிப்படியாக மீண்டும் திறக்கத் தயாராக இருப்பதாக டென்மார்க்கின் பிரதமர் “Mette Fredriksen” அறிவித்துள்ளார்.
நோர்வேவைப் போலவே, மழலையர் பள்ளிகளும், சிறிய குழந்தைகளுக்கான பள்ளிப்படிப்பும் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று டென்மார்க் முன்னர் அறிவித்திருந்தது.
டென்மார்க்கில் முதலில் எதைத் திறக்க முடியும் என்பது பற்றிய இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இதன்படி , இன்று செவ்வாய் மாலை காணொளி இணைப்பு மூலம் பிரதமர் “Mette Fredriksen” மற்ற கட்சித் தலைவர்களுடன் உரையாடவுள்ளார். அதில், டான்மார்க் மீண்டும் திறக்கப்படுவது மற்றும் டென்மார்க் பொருளாதாரம் பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்: TV2