கொரோனா தொற்றினால் 41 ஆவது மரணம் பதிவு!

You are currently viewing கொரோனா தொற்றினால் 41 ஆவது மரணம் பதிவு!

இலங்கையில் மற்றுமொரு கொவிட் 19 மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ராகமை பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய நபரொருவர் அவரது வீட்டில் உயிரிழந்துள்ள நிலையில், ராகமை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டமையால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

பகிர்ந்துகொள்ள