ஒஸ்லோவிலுள்ள அவசர மருத்துவ மனைக்கு(legevakt) அழைக்கும் ஒஸ்லோ வாசிகள் தங்களுக்கு இருக்கும் கொரோனா அறிகுறிகள் மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பாக தொலைபேசியிலும் நேரடியாகவும் பொய்சொல்லி வருவதாக அவசரமருத்துவ மனையின் நாளாந்த கண்காணிப்பு மேலாளர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
இந்த பொய் சொல்லுவோரால் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படுவதாகவும் கவலை தெரிவித்துள்ளார் அத்தோடு சிவப்பு மஞ்சள் நாடுகளுக்கு சென்றோர் அனைவரையும் பரிசோதிக்கவேண்டும் எனவும் பொது இடங்களில் அனைவரும் முகக்கவசங்கள் அணிவதை பரிந்துரை செய்யவேண்டும் எனவும் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை பொய்சொல்லுவோருக்கு எதிராக அத்துமீறல் சட்டம் மேற்கொள்ளலாம் எனவும் எச்சரித்துள்ளார்.