தனக்கு “கொரோனா” தொற்று இருப்பதை அறிந்தும் அதை சட்டை செய்யாமல் விமானத்தில் பயணித்த பயணியொருவருக்கு, தமது விமானசேவையை பயன்படுத்த வாழ்நாள் தடையை குறித்த விமானசேவை நிறுவனம் விதித்துள்ளது.
அமெரிக்காவில், நியூயோர்க்கிலிருந்து புளோரிடா நோக்கி பயணப்பட்ட மேற்படி பயணியொருவருக்கே “Jet Blue” விமானசேவை வாழ்நாள் தடை விதித்துள்ளது.
இதனால், விமான தரையிறங்கியதும், ஓடுபாதையிலேயே இருமணிநேரம் தரித்து நின்றதாகவும், விமான பணியாளர்கள் உட்பட குறித்த விமானத்தில் பயணித்த அனைவரும் வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படாமலேயே வெளியேற்றப்பட்டதாக மேலும் தெரியவருகிறது.
இதேவேளை, நோர்வேயில், தொடரூந்தில் பயணித்த ஒருவர் சக பயணியொருவர்மீது தனது மூச்சுக்காற்று படுப்படியாக நடந்துகொண்டு, குறிப்பிட்ட சகபயணிக்கு பயப்பிராந்தியை ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, குறித்த தொடரூந்து இடைநடுவில் பயணத்தை நிறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஒஸ்லோவில் மைந்துள்ள மருந்தகம் ஒன்றுக்குச்சென்ற வாடிக்கையாளர் ஒருவர், தனக்கு “கொரோனா” தொற்று இருப்பதாகவும், தன்னை தனிமையில் இருக்கும்படி சொல்லப்பட்டதகவும், எனினும் மருந்து தேவிக்காகவே தான் மருந்தகத்துக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அந்தவேளையில் குறித்த மருந்தகத்தில் அளவுக்கதிகமான வாடிக்கையாளர்கள் நிறைந்திருந்தால் அங்கு பதட்ட நிலை தோன்றியதையடுத்து, குறித்த மருந்தகம் 10 நிமிடங்கள் வரை பூட்டப்பட்டு, அனைத்து இடமும் வேதிப்பொருள் கொண்டு சுத்திகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.