கடந்த சில நாட்களாக ரஷ்யாவில் ஒரு நாளின் சராசர பாதிப்பு தொகை 10 ஆயிரமாக இருந்து வருகின்றது. கொரோனா தொற்றுகளை கட்டுப்படுத்த அதிபர் “Putin” பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் கொரோனா பாதிப்பில் உலக அளவில் ரஷ்யா தற்போது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
இன்று மேலும் 9,709 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 281,752 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு இன்று 94 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 2,631 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 67,373 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.