பிருத்தானியாவில் உள்ள சவுத்தாம்ப்டன் (Southampton) நகர பொது மருத்துவமனையில் செவிலியர்களாக பணியாற்றி வந்தவர்கள், கேட்டி டேவிஸ்(வயது 37), எம்மா டேவிஸ் (Katy மற்றும் Emma Davis).
இரட்டையர்களான இவர்கள் இருவரும், ஒரே மருத்துவமனையில் வேலை செய்து வந்த வேளையில், அண்மையில் கொரோனா அவசர சிகிச்சை பிரிவிற்கு இருவரும் மாற்றப்பட்டனர். புன்னகையோடு அதை ஏற்றுக்கொண்டு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்த கேட்டி, எம்மா இருவருமே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி கொண்டனர்.
இருவருக்கும் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் சிகிச்சை பலனின்றி கேட்டி கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். எம்மா டேவிஸ் நேற்று முன்தினம் பரிதாபமாக மரணமடைந்தார். இரட்டை சகோதரிகளான இந்த செவிலியர்களின் மரணம் பிருத்தானியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.