பிரேசில் (Brazil) நாட்டில் கொரோனா தாக்கி சிகிச்சை பெற்று வந்த 97 வயதான மூதாட்டி ஒருவர் வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக குணமாகி வீடுதிரும்பியுள்ளார்.
இந்த கொடிய வைரசுக்கு பலியானவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள்தான் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை கொரோனா தாக்கினால் அவர்கள் உயிர் பிழைப்பது கடினம் என்று கூறப்படுகின்றது.
எனினும் சில நாடுகளில் 90 வயதை கடந்த முதியவர்கள் சிலர் கொரோனாவை எதிர்த்து போராடி, அதில் இருந்து மீண்டதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் பிரேசில் நாட்டில் சா பாலோ(São Paulo) நகரில் உள்ள மருத்துவமனையில் கொரோனா தாக்கி சிகிச்சை பெற்று வந்த 97 வயதான மூதாட்டி ஒருவர் வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக குணமாகி வீடு திரும்பியுள்ளார்.
கினா தால் கொலேட்டோ என்ற அந்த மூதாட்டி கொரோனாவுடன் போராடி வென்றதை சிறப்பிக்கும் விதமாக, அவர் வீடு திரும்பும்போது மருத்துவ ஊழியர்கள் இருபுறமும் அணிவகுத்து, கை தட்டி, உற்சாகப்படுத்தி அவரை வழியனுப்பினர்.