தடுப்பூசி கண்டுபிடிப்பு, நோயைக் கண்டறிதல் மற்றும் கோவிட் -19 சிகிச்சைக்கான ஆதரவை சேகரிக்கும் மாநாட்டிற்கு தலைமை தாங்க நோர்வே கேட்டுக்கொள்ளப்பட்டதாக பிரதமர் “Erna Solberg” கூறியுள்ளார்.
“ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஜி 20 நாடுகள் இப்போது கோவிட் -19 இன் தடுப்பூசி மேம்பாடு, நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கான ஆதரவை சேகரிக்க ஒரு பெரிய சர்வதேச மாநாட்டைத் தொடங்குவதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று பிரதமர் “Erna Solberg” (H) வெள்ளிக்கிழமை கொரோனா நிலைமை குறித்த தினசரி செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இது இலத்திரனியல் மாநாடாக இருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக தகவல்: VG