“கொரோனா” வால் பாதிக்கப்பட்டவரா; வைத்தியர்கள் தொடுக்கும் 6 வினாக்கள்! “கொரோனா” அதிர்வுகள்!!

You are currently viewing “கொரோனா” வால் பாதிக்கப்பட்டவரா; வைத்தியர்கள் தொடுக்கும் 6 வினாக்கள்! “கொரோனா” அதிர்வுகள்!!

“கொரோனா” வைரஸால் பாதிக்கப்பட்டு, வைத்தியசாலைகளை நாடும்போது, நோயாளியிடமிருந்து முக்கியமான 5 கேள்விகளுக்கான விடைகளை வைத்தியர்கள் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

  • ஏற்கெனவே வேறு நோய்களால் அவதியுறுகிறீர்களா…?

புகைத்தலினால் வரக்கூடியது உட்பட, சுவாச நோய்கள், இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் வாழ்நாள் முழுவதும் இருக்கக்கூடிய நோய்கள் ஏதும் இருக்கின்றவனா என்பதை பட்டியலிட்டு வைத்திருங்கள் …

  • மருந்துகள் ஏதும் பயன்படுத்துகிறீர்களா…?

வழமையாக ஏதும் மருந்துகளை நீங்கள் பாவிப்பவராக இருந்தால் அதற்கான மருந்துப்பட்டியலை உங்கள் நிரந்தர வைத்தியரிடமிருந்து பெற்று, எப்போதும் உங்களுடனேயே வைத்திருங்கள் …

  • ஒவ்வாமையால் (அலர்ஜி) அவதிப்படுகிறீர்களா…?

உணவுப்பொருட்களாலேயோ அல்லது மருந்துகளாலேயோ ஒவ்வாமையை எதிர் கொள்கிறீர்களா …

  • வேறு பிரதனான விடயங்கள் பற்றி வைத்தியர்கள் அறியவேண்டுமா …?

உங்களுக்கு உடலுறுப்பு மாற்று செய்யப்பட்டுள்ளதா அல்லது செயற்கை உறுப்புக்கள் உடலில் பொறுத்தப்பட்டுள்ளதா …

  • உங்கள் நெருங்கிய உறவினர் பற்றிய விபரம்…?

அவசியமேற்படின் உங்களது விடயங்களை அறிவிக்கக்கூடிய உங்களது நெருங்கிய உறவினர்களின் தொடர்பு விபரங்கள் …

  • வேறு பிரதானமான தகவல்கள் ஏதும் உள்ளதா…?

உங்களது வாழ்க்கை முறை உட்பட வைத்தியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வேறு தகவல்கள் உள்ளனவா …

இவை போன்ற தகவல்களை வைத்தியர்களோ அல்லது சுகாதாரத்துறை சார்ந்தவர்களோ இலகுவில் பெற்றுக்கொள்ளும் விதத்தில் எப்போதும் உங்களுடனேயே வைத்திருப்பதால், துரதிர்ஷ்ட வசமாக “கொரோனா” வைரஸால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நிலை வரும்போது, உங்களது தகவல்களை வைத்தியசாலை இலகுவில் பெற்றுக்கொண்டு துரிதமாக வைத்திய சேவைகளை வழங்குவதற்கு இலகுவாகவிருக்குமென தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள