“கொரோனா” வைரசால் சுவீடனில் 30 குழந்தைகள் பாதிப்பு!

You are currently viewing “கொரோனா” வைரசால் சுவீடனில் 30 குழந்தைகள் பாதிப்பு!

“கொரோனா” வைரஸ் பாதிப்பின் பக்கவிளைவாக, “அழற்சி” போன்றதொரு பாதிப்புக்கு சுவீடனில் சில நூறு குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 30 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சுவீடனின் “Göteborg” நகர வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

“கொரோனா” தொற்றுதலின் பின், குழந்தைகளின் உடலிலுள்ள நோயெதிர்ப்பு சக்தி வலுவிழந்துபோவதால் “MIS – C” என்ற இவ்விதமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மேற்படி வைத்தியசாலை தெரிவித்துள்ளதோடு, தமது சிறுவர் பிரிவு பாதிக்கப்பட்ட குழந்தைகளால் நிரம்பியுள்ளதாகவும் தெரிவிக்கிறது.

மிகவும் அபூர்வமானதாக இதுவரை அறியப்பட்ட இவகையான பாதிப்புக்களுக்கு நோர்வேயிலுள்ள சில குழந்தைகளும் உள்ளானதாகவும், அதனைத்தொடர்ந்து இவ்விடயத்தில் நோர்வே சுகாதாரத்துறை மிகமிக அவதானமாக இருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

நேரடியான “கொரோனா” வைரஸ் பாதிப்பாக இது இல்லாத நிலையில், தொற்றின் பக்க விளைவாக இந்த “அழற்சி” இருந்தாலும், இதய செயற்பாடுகளை பாதிப்பதாக இருக்குமென தெரிவித்திருக்கும் சுவீடனின் குழந்தை வைத்திய நிபுணரான “Maria Mossberg” தெரிவித்துள்ளதோடு, இதன் அறிகுறிகளாக,

1 கடுமையான காய்ச்சல்;

2 வயிற்று உபாதைகள்;

3 அதியுச்சமாக இதய செயற்பாடுகளில் பாதிப்பு

என்பன இருக்குமெனவும் தெரிவித்துள்ளார்.

இந்தவகையில், சுவீடனில் இதுவரை 30 குழந்தைகள் கடுமையான பாதிப்புக்களுக்கு உள்ளாகி, வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள