“கொரோனா” வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து பரீட்ச்சார்த்தத்திற்கு தயார்! 45 தன்னார்வலர்கள் மீது பரிசோதனை!!

You are currently viewing “கொரோனா” வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து பரீட்ச்சார்த்தத்திற்கு தயார்! 45 தன்னார்வலர்கள் மீது பரிசோதனை!!

“கொரோனா” வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து அமெரிக்காவில் பரீட்சித்து பார்க்கப்படவுள்ளது. 45 தன்னார்வலர்கள்மீது சோதனை முறையில் பரீட்சித்து பார்க்கப்படவுள்ள தடுப்பு மருந்தின் மாதிரிகள், ஆபத்தான பின்விளைவுகள் எதையும் தருவிக்குமா என்பதை ஆராய்வதற்காகவும்,  அது வெற்றியளிக்கும் படச்சத்தில், மனிதர்களின் உடலிலுள்ள எதிர்ப்பு சக்தி, இத்தடுப்பு மருந்து மாதிரிகளுக்கு எவ்வாறான எதிர்விளைவுகளை கொடுக்கும் என்பதையும் ஆராய்வதே பிரதான நோக்கமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

உலகெங்கிலும் இதுவரை சுமார் 30 நாடுகளை சேர்ந்த 82.000 மனிதர்களை தாக்கியுள்ள கொரோனா வைரஸ், இதுவரை 2800ன் பேரை பலி வாங்கியுள்ளது. அதிகமான இறப்புக்கள் சீனாவில் நிகழ்ந்திருந்தாலும், ஈரான், இத்தாலி, சுவீடன் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளிலும் மரணங்கள் சம்பவித்துள்ளன.

உத்தேச தடுப்பு மருந்துக்கள் பரிசோதனைகள் சுமார் 16 வாரங்கள் நடைபெறும் என்றும், பரிசோதனைகள் வெற்றியளிக்கும் பட்சத்தில், முழுமைப்படுத்தப்பட்ட தடுப்பு மருந்துகள் 2021 ஆம் ஆண்டிலேயே பாவனைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த முயற்சிகளுக்கு அதிகளவில் பொருளாதார முதலீடுகளை செய்யும் நோர்வே, தனது பங்காக சுமார் 178 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. ஜப்பான், ஜெர்மனி, பெல்ஜியம், கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளும் பொருளாதார உதவிகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

பகிர்ந்துகொள்ள