“கொரோனா” வைரசை காவிச்செல்லும் இன்னொரு உயிரினம்! “கொரோனா” அதிர்வுகள்!!

You are currently viewing “கொரோனா” வைரசை காவிச்செல்லும் இன்னொரு உயிரினம்! “கொரோனா” அதிர்வுகள்!!

சீனாவின் “Wuhan” மாகாணத்தில் பரவத்தொடங்கிய “கொரோனா” வைரசை காவிச்சென்று மனிதர்களிடம் பரப்பியதில் வெளவால்கள் பிரதான பங்கு வகித்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

எனினும் சமீபத்திய ஆய்வுகளின்படி, அழிந்துவரும் நிலையில் இருக்கும் உயிரினங்களில் ஒன்றான “பங்கொலின் / Pangolin” என்ற உயிரினமும் “கொரோனா” வைரசை காவிச்செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

அழிவடைந்துவரும் மேற்படி உயிரினம் ஆசிய, ஆபிரிக்க காடுகளில் மிகவும் குறைந்தளவில் இருப்பதாகவும், சீனத்து மாமிச சந்தைகளில் இந்த உயிரினத்தின் இறைச்சி விற்கப்பட்டு வந்ததாகவும், இதிலிருந்தே ஆரம்பத்தில் “கொரோனா” வைரஸ் சீனாவின் “Wuhan” மாகாணத்தில் பரவியிருக்கலாமென்ற சந்தேகத்தை முன்னதாகவே சீன விவசாய ஆராய்ச்சித்திணைக்களம் வெளியிட்டிருந்ததாகவும், இதனால் சீனாவில் மேற்படி உயிரினத்தின் இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், சீன விவசாய ஆராய்ச்சித்திணைக்களத்தின் இந்த சந்தேகத்தை பிரித்தானிய ஆய்வாளர்கள் அப்போது நிராகரித்திருந்ததாகவும், ஆனால் தற்போது சமீபத்தில் இந்த விடயம் ஆய்வுபூர்வமாக நிறுவப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கறது.

பகிர்ந்துகொள்ள