கொரோனா வைரஸ்! அறிகுறிகள் என்ன?

  • Post author:
You are currently viewing கொரோனா வைரஸ்!  அறிகுறிகள் என்ன?

சீனாவில் இனங்காணப்பட்டுள்ள இந்த வைரஸ் இன்று வரையில் உலகில் பல நாடுகளில் பரவியுள்ளது. இதுவே 2019 – நொவல் கொரோனா வைரஸ் (2019 – nCoV) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
பறவைக்காய்ச்சல், சார்ஸ், சிகா வைரஸ்களின் சவாலுக்கு பின்னர் நொவல் கொரோனா வைரஸ் மனித ஆரோக்கியத்திற்கு சவாலாக விளங்குகின்றது.

உலக மக்கள் மத்தியல் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள இவ்வைரஸின் பிரதான குடும்பமான கொரோனா வைரஸ் குடும்பம் 1961ஆம் அண்டில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தடிமலுக்குள்ளாகி இருந்த நபர் ஒருவரின் நாசித் துவாரங்களில் ஏற்பட்ட மாதிரியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது தான் இவ்வைரஸ் குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ்! அறிகுறிகள் என்ன? 1

இவ்வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு வைரஸ்கள்தான் மனிதனைப் பாதிக்கக்கூடியனவாக இருந்தன. ஆனால் தற்போது அதில் மேலுமொரு வைரஸ் சேரந்து கொண்டுள்ளது.

நொவல் கொரனா வைரஸ் (2019 – nCoV) மனிதர்களில் முன்பு இனம் காணப்படாத ஒரு வைரஸாக விளங்குகின்றது என உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டிருக்கின்றது.
இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

இவ் வைரஸ் மிருகங்களில் இருந்து மனிதனுக்கு கடத்தப்பட்டுள்ளதாக சீன மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர். ஆதனால் விலங்குகளுடன் பாதுகாப்பற்ற முறையில் நேரடி தொடர்பை மேற்கொள்ள வேண்டாம் என்றும் இறைச்சி மற்றும் முட்டையை நன்கு சமைத்து சாப்பிட வேண்டும் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இருப்பினும் இவ் வைரஸ் தற்போது ஆளுக்காள் பரவும் நிலையை அடைந்துள்ளதாக சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்

கொரோனா வைரஸ்! அறிகுறிகள் என்ன? 2

இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு தடிமல் போன்ற மேல் சுவாச குழாய் நோய்கள் இலேசாக வெளிப்படலாம். ஆனால் கீழ் சுவாசக் குழாயையும் பாதிக்கலாம். குறிப்பாக இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு கடும் இருமல், சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற நோய் அறிகுறிகளும் வெளிப்படுகின்றன என்று சீனாவின் சுகாதார தேசிய ஆணைக்குழு தெரிவித்திருக்கின்றது.

அதேநேரம் மூக்கிலிருந்து நீர் வடிதல், தலைவலி, இருமல், தொண்டை வலி, உடல் சோர்வான நிலை என்றபடியும் அறிகுறிகள் ஏற்பட முடியும். இவ்வைரஸ் தாக்கம் சில சமயம் மூச்சு குழாய் அழற்சி போன்ற கீழ் சுவாச குழாய் நோய்களை ஏற்படுத்தி தீவிர நிலையை அடையலாம். அதன் விளைவாக நிமோனியா, மூச்சு குழாய் அழற்சி ஏற்பட்டு ஈரல் பலவீனமடையலாம். சிறுநீரகச் செயலிழப்பும் ஏற்படலாம். பெரும்பாலும் இது உயிரிழப்புக்கும் வழிவகுக்கலாம்.

கொரோனா வைரஸ்! அறிகுறிகள் என்ன? 3

அதன் காரணத்தினால் சாதாரண தேகாரோக்கியம் கொண்டவர்கள் இந்நோய்க்கு உள்ளானவர்களுடன் நெருக்கமான தொடர்பை பேணும்போது இவ்வைரஸ் தொற்றுக்கான வாய்ப்பு அதிகமென சுட்டிக்காட்டியுள்ள மருத்துவர்கள் இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நெருக்கமான தொடர்பைப் பேணவேண்டாம் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இவ்வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கும் தவிர்த்துக் கொள்வதற்கும் தடுப்பு மருந்துகளையோ மாத்திரைகளையோ கண்டுபிடித்து புழக்கத்திற்கு விட சிறிது காலம் எடுக்கும் என மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறான நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம் சர்வதேச சுகாதார அவசர நிலையைப் பிரகடனப்படுத்துவது குறித்தும் தீவிரமாக ஆராய்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள