கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், உகான் உள்ளிட்ட சீன நகரங்கள் முற்றிலுமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. மேலும் 20,438-பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஹாங்காங்கில் வுஹான் வைரஸால் 39 வயதான நபர் ஒருவர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது சீனாவுக்கு வெளியே இரண்டாவது மரணமாகும்!
குறித்த நபர் கடந்த ஜனவரி 21 அன்று வுஹானுக்கு ரயிலில் பயணம் செய்திருந்தார். இரண்டு நாட்களுக்குப் பின் அவர் மீண்டும் ஹாங்காங் திரும்பியிருந்தார். ஹாங்காங் அதிகாரிகள் இதை இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
கொரோனா வைரசால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 426ஆக உயர்ந்துள்ளது.