கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் பதிவான தொற்று மற்றும் சாவு விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. 22,767 பேருக்கு கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்று (PCR அடிப்படையில்) 4% வீதமாக அதிகரித்துள்ளது. இதுவரை 5,977,770 பேருக்கு பிரான்சில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 878 பேர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நிலையில், 6,787 பேர் மருத்துவமனையில் சாதாரண சிகிச்சையில் உள்ளனர். தினமும் 20.000 இற்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்படுகின்றபோதும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை முந்தைய மூன்று ‘தொற்று அலை’களுடன் ஒப்பிடும் அளவு அதிகரிக்கவில்லை. அதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் 22 பேர் மருத்துவமனயில் சாவடைந்துள்ளனர். 111,638 பேர் இதுவரை பிரான்சில் கொரோனாவினால் சாவடைந்துள்ளனர். இவர்களில் 85,133 பேர் மருத்துவமனையில் சாவடைந்துள்ளனர்.