கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் பதிவான தொற்று மற்றும் சாவு விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. 26,453 பேருக்கு கடந்த 24 மணிநேரத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. PCR அடிப்படையில் தொற்று 3.9% வீதமாக உள்ளது. 6,425,436 பேருக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் 9,546 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,831 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 74 பேர் இதே 24 மணிநேரத்தில் சாவடைந்துள்ளனர். இதனால் மொத்த சாவு எண்ணிக்கை 112,607 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 85,066 பேர் மருத்துவமனையில் சாவடைந்துள்ளனர்.