நாட்டை மூடுவதை, மே 9 ஆம் திகதி வரை நீடிக்கவுள்ளதாக ஸ்பெயின் முடிவு செய்துள்ளது என்று AFP தெரிவித்துள்ளது.
இதனால், வேலைக்குச் செல்வது, மருத்துவரிடம் செல்வது அல்லது தேவையான கொள்முதல் செய்வது போன்ற, மிக முக்கியமான தேவைகளைத் தவிர மக்கள் வீட்டிற்கு வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை, ஸ்பெயில் கட்டுமானத் தொழிற்துறை பணியாளர்கள் சுமார் 300,000 பேர் தொழில்களுக்குத் திரும்பினர்.
ஸ்பெயின் தனது உள்ளிருப்பை நீட்டிக்கும் அதே நேரத்தில், போர்த்துகீசிய அதிகாரிகள் மே மாதத்திலிருந்து கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்துள்ளதாக NTB தெரிவித்துள்ளது.
மேலதிக தகவல்: VG