ஸ்பெயினில் கொரோனா வைரஸ் காரணமாக 15,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக ஸ்பெயின் அதிகாரிகளின் புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று வியாழன் இறப்பு எண்ணிக்கை 683 ஆல் அதிகரித்து 15,238 ஆக உயர்ந்துள்ளது.
150,000 க்கும் அதிகமானோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று எண்ணிக்கை 146,690 லிருந்து 152,446 ஆக அதிகரித்துள்ளது.