கொரோனா 2வது அலையில் இருந்து தமிழ்நாடு மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில் நாளாந்த தொற்றாளர்களது எண்ணிக்கை 9 ஆயிரமாக குறைவடைந்துள்ளன.
நேற்று (ஜூன்-17) மாலை வரையான நிலவரத்தின் அடிப்படையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் நேற்று மலையுடனான கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொற்றுதியானவர்களது எண்ணிக்கை 9 ஆயிரத்து 118 ஆக பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 1227 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சிகிச்சை பலனின்றி 17 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து கோயம்புத்தூரில் இதுவரை மொத்த தொற்றுக்கு உள்ளானவர்களது எண்ணிக்கை 2 இலட்சத்து 9 ஆயிரத்து 481 ஆகவும் மொத்த உயிரிழப்பு 1823 ஆகவும் அதிகரித்துள்ளது.
சென்னையில் 559 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சிகிச்சை பலனின்றி 33 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் சென்னையில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 5 இலட்சத்து 27 ஆயிரத்து 835 ஆகவும் உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 7 ஆயிரத்து 953 ஆகவும் அதிகரித்துள்ளது.
இதையடுத்து தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 23 இலட்சத்து 97 ஆயிரத்து 864 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் சிகிச்சை பலனின்றி மேலும் 210 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழ்நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 30 ஆயிரத்து 548 ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை ஒரு இலட்சத்து 523 ஆக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.