கொலை அச்சுறுத்தலை அடுத்து முல்லைத்தீவு நீதவான் நாட்டை விட்டு வெளியேறினார்!

You are currently viewing கொலை அச்சுறுத்தலை அடுத்து முல்லைத்தீவு நீதவான் நாட்டை விட்டு வெளியேறினார்!

சிங்கள கடும்போக்கு இனவாதி சரத் வீரசேகர உட்பட்ட பௌத்த பிக்குகளால் விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல்கள்களை அடுத்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் ரி-சரவணராஜா அவர்கள்  உயிர்ப் பாதுகாப்புத் தேடி நாட்டைவிட்டு வெளியேறி உள்ளார்.

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் அமைந்திருந்த சைவ மக்களின் பாரம்பரிய குல வழிபாட்டுத் தெய்வமான ஆதி சிவன் ஆலயத்தை அழித்து விட்டு அவ்விடத்தில் சிங்கள அடிப்படை வாதிகளதும் இனவாத பௌத்த பிக்குகளதும் திட்டமிட்ட ஆக்கிரமிப்பின் மூலம் அமைக்கப்பட்டு வந்த சட்டவிரோத குருந்தி விகாரை கட்டுமானத்தை நிறுத்தக் கோரியும்

அங்கு சைவமக்களின் குல தெய்வமாக இருந்த ஆதி சிவன் ஆலய வழிபாட்டு உரிமையை மீட்டுத் தருமாறு கோரியும் ஆலய நிர்வாகத்தினராலும் தமிழ் இன உணர்வாளர்களாலும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு நடவடிக்கைகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நீதிமன்ற கட்டளையின் படி விகாரை கட்டுமானத்திற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நீதிமன்ற தடையையும் மீறி தொல்லியல் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் சட்ட விரோத கட்டுமானங்கள் இடம் பெற்றமை குறித்து வழக்குத் தொடுநர்களால் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வரப் பட்ட நிலையில்

நீதிமன்று குறித்த விடயத்தை கவனத்தில் கொண்டு நீதவான் அடங்கிய உயர்மட்ட குழு அங்கு சென்று பார்வையிட்டு திரும்பிய நிலையில் அது தொடர்பான வழக்கு விசாரணையின் போது நீதிமன்று கடுமையான தடை உத்தரவை பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் ஆலய நிர்வாகத்தினரும் தமிழ் உணர்வாளர்களும் தமது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் முன்வைத்த பொங்கல் வழிபாட்டு கோரிக்கைக்கு அமைவாக அதனை ஆராய்ந்த நீதிமன்று அமைதியான பொங்கல் வழிபாட்டிற்கு அனுமதி அளித்து பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை

அதனைக் குழப்பும் நடவடிக்கையில் சிங்கள கடும்போக்கு இனவாதி சரத்வீரசேகரவால் பேரூந்துகளில் சிங்கள மக்கள் அங்கு கொண்டு வரப்பட்டு இறக்கப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கிப்பட்டதுடன் சட்டவிரோதமாக அமைக்கப்படும் விகாரையின் விகாராதிபதி எனத் தன்னைக் கூறிக் கொள்ளும் பிக்குவும் பொங்கல் வழிபாட்டு இடத்தில் வந்து அச்சுத்தல் அடாவடித் தனத்தில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில்   முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் குறித்து அண்மையில் சிங்கள அடிப்படைவாதி சரத்வீரசேகரவால் சிறீலங்கா நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய போது அவமரியாதையாக கருத்து தெரிவிக்கப் பட்டிருந்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழர் தாயகத்திற் உட்பட்ட நீதிமன்றங்களில் பணியாற்றும் சட்டத்தரணிகள் பாரியளவிலான கண்டன எதிர்ப்புப் போராட்டத்தை நடாத்தியிருந்தனர்.

இந்நிலையில் நீதவானுக்கு சிங்கள அடிப்படைவாதி சரத்வீரசேகரவாலும் பௌத்த பிக்குகளாலும் தொடர் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்துள்ளதை அடுத்து அவர் பாதுகாப்புத் தேடி நாட்டை விட்டு வெளியேறிச் சென்றிருப் பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை அச்சுறுத்தலை அடுத்து முல்லைத்தீவு நீதவான் நாட்டை விட்டு வெளியேறினார்! 1

பகிர்ந்துகொள்ள

Leave a Reply