கொழும்பிலிருந்து தப்பிவந்த இரண்டாவது நபர் சங்கானையில் அடையாளம் காணப்பட்டு

You are currently viewing கொழும்பிலிருந்து தப்பிவந்த இரண்டாவது நபர் சங்கானையில் அடையாளம் காணப்பட்டு
facebook sharing button
twitter sharing button
linkedin sharing button
pinterest sharing button
whatsapp sharing button
sharethis sharing button
கொழும்பிலிருந்து தப்பிவந்த இரண்டாவது நபர் சங்கானையில் அடையாளம் காணப்பட்டு 1

கொழும்பிலிருந்து பாரவூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்கு தப்பித்து வந்த இரண்டாவது நபரும் சங்கானையில் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார்.

சங்கானை தேவாலய வீதியில் அவரது வீட்டில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார்.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாகக் காணப்படும் கொழும்பு மாவட்டம் டாம் வீதியில் தங்கியிருந்த ஒருவர், பாரவூர்தியில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த நிலையில் அவரை உடனடியாக தேடிக் கண்டறிந்த வலி.மேற்கு பிரதேச சுகாதார பரிசோதகர்கள், சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தினர்.

முதலாவது நபர் சுழிபுரம் – தொல்புரம் முத்துமாரி அம்மன் ஆலய வீதியைச் சேர்ந்த 30 வயதுடையவரே அமைச்சின் அறிவுறுத்தல்களை மீறி யாழ்ப்பாணத்துக்கு தப்பி வந்தவர் என்று கண்டறியப்பட்டார்.

இந்த நிலையில் சங்கானையைச் சேர்ந்த இரண்டாவது நபரும் இன்று(22) மாலை வட்டுக்கோட்டை பொலிஸாரின் உதவியுடன் கண்டறியப்பட்டார்.அவர் உடனடியாகவே சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார்.

கொழும்பு டாம் வீதியில் தங்கியிருந்து மேசன் வேலை செய்வதாகவும் அங்கிருந்து மிளகாய் ஏற்றி வந்த பாரவூர்தியில் ஏறி இன்று யாழ்ப்பாணத்துக்கு வந்ததாக அவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கிய போதும் சந்தேகங்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இருவரும் வருகை தந்த பாரவூர்திகளின் சாரதிகள் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சிறப்புப் பொலிஸ் அணி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள