கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரதத்துடன்; மோதுண்டு மாணவன் ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த விபத்து சாவகச்சேரி இந்துக்கல்லூரி முன்பாக மாலை 6 மணியளவில் இடம்பெற்ருந்தது.
மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் கொடிகாமத்தை சேர்ந்த உதயகுமார் பானுசன் (வயது 18) எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நாளை பாடசாலையில் உயர்தர மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்வுக்கு ஒன்றுக்காக ஆடை வாங்கச் சென்ற நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.