கொழும்பில் இன்று நடைபெற்ற போராட்டத்தின்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் பெண் செயற்பாட்டாளர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சுதந்திர சதுக்கத்தில் இருந்து கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகம் வரை ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தியதுடன், கொழும்பில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்பாக பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களில் 14 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எஞ்சியிருந்த எதிர்ப்பாளர்கள் கறுவாத்தோட்டம் பொலிஸாருக்கு முன்பாக புதிய போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.