கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! குழப்பம் விளைவித்த சிங்கள ராவய!

You are currently viewing கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!  குழப்பம் விளைவித்த சிங்கள ராவய!

கொழும்பு- வெள்ளவத்தை கடற்கரையில் பகுதியில் இடம்பெற்ற தமிழ் இன அழிப்பின் 16 வது நினைவேந்தலின் போது சிங்கள ராவய அமைப்பினர் அங்கு வந்து கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் இன அழிப்பின் 16 வது நினைவேந்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) கொழும்பு- வெள்ளவத்தை கடற்கரையில் தீபச் சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது சிங்கள ராவய எனும் அமைப்பை சேர்ந்தவர்கள் அந்த இடத்திற்கு வருகை தந்து தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்த நினைவேந்தலில் கலந்துக்கொண்டவர்கள் விடுதலைப்புலி அமைப்பின் பணத்தை பெற்று செயற்படுபவர்கள் என்றும், பலஸ்தீனுக்கு ஆதரவாளர்கள் என்றும், இஸ்ரேவுக்கு எதிரானவர்கள் என்று சிங்கள ராவய அமைப்பை சேர்ந்தவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply