கொழும்பு துறைமுகத்தில் மிதந்து வந்த பொருட்களை தொட்டவர்களுக்கு ஒவ்வாமை நோய்!!

You are currently viewing கொழும்பு துறைமுகத்தில் மிதந்து வந்த பொருட்களை தொட்டவர்களுக்கு ஒவ்வாமை நோய்!!

கொழும்பு துறைமுகத்தில் எரிந்த கப்பலில் உள்ள பொருட்களை எடுத்து சென்ற மக்களுக்கு ஒரு வகையான ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 நச்சு இரசாயனங்கள் உள்ளதாக அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கையை மீறி சென்ற மக்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த மக்களின் தோலின் மேற்பரப்பில் கொப்பளங்கள், புள்ளிகள் மற்றும் சொறிவு தன்மை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொருட்கள் சேகரிப்பதற்காக கடல் நீரில் அதிக நேரம் இருந்த மக்களின் கை மற்றும் கால்களில் கொப்பளகளை அதிகமாக காண முடிவதாக தெரிவிக்க்பபடுகின்றது.

எச்சரிக்கையை மீறி கடற்கரைக்கு சென்ற மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள ஒவ்வாமையை விடவும் எதிர்வரும் காலங்களில் ஏற்படவுள்ள பாதிப்புகள் நினைத்து பார்க்க முடியாதவைகள் என கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் தர்ஷனி லஹதபுர தெரிவித்துள்ளார்.

இனிமேலும் யாரும் அங்கு சென்று விட வேண்டாம் என்பதனை அவர் மீண்டும் ஒரு முறை நினைவுப்படுத்தியுள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply