கொழும்பு விமான நிலையத்தில் பிரித்தானிய பிரஜாவுரிமை பெற்ற தமிழர் கைது!

You are currently viewing கொழும்பு விமான நிலையத்தில் பிரித்தானிய பிரஜாவுரிமை பெற்ற தமிழர் கைது!

பிரிட்டனில் பயங்கரவாத அமைப்பிற்கு நிதிதிரட்டிய குற்றச்சாட்டில் தமிழர் ஒருவர் கொழும்பு விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

2009இல் அவருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த பயணதடையின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரிட்டிஸ் பிரஜாவுரிமையை கொண்டுள்ள கிளிநொச்சியை சேர்ந்த 43 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து 2009 இல் வெளியேறி  பிரிட்டிஸ் பிரஜாவுரிமையை பெற்றிருந்த இந்த நபர் பிரிட்டனில் பயங்கரவாத அமைப்பிற்காக நிதி சேகரித்தார்,அவற்றை கொழும்பு வன்னியில் உள்ள தனிநபர்களிற்கு வழங்கினார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2009 இல் சந்தேகநபரின் நடவடிக்கைகள் தொடர்பில் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் பயண தடையை பெற்றிருந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இவர் சனிக்கிழமை பிரிட்டனில் இருந்து கொழும்பு விமானநிலையம் வந்தவேளை கைதுசெய்யப்பட்டுள்ளார்.கொழும்பு வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply