கோடரிக்காம்பு பிள்ளையான், சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினால் கைது!!

You are currently viewing கோடரிக்காம்பு பிள்ளையான், சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினால் கைது!!

கோடரிக்காம்பு பிள்ளையான், சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளான்.கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கொழும்பு விசேட குற்ற புலனாய்வு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட, ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் பிரகாரம் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளதாத தெரிய வந்துள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி. சந்திரகாந்தன் ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக வழங்கிய வாக்குமூலத்தின் பிரகாரம் மீண்டும் அவர் இன்று அவரது மட்டக்களப்பு அலுவலகத்தில் வைத்து கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட குற்ற புலனாய்வுத் துறை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லபட உள்ளார். பிள்ளையான் கைது செய்து தண்டிக்கப்பட வேண்டிய மிக மோசமான கிரிமினல் குற்றவாளி என்பதில் யாருக்கும் மாற்று கருத்திருக்க முடியாது

ஆனால் பிள்ளையான் தென்னிலங்கை பயன்படுத்திய வெறும் கருவி மட்டுமே என்பதை நாங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்

பிள்ளையானை குற்றசெயல்களில் ஈடுபடுத்திய கோட்டாபய ராஜபக்சேவின் “Triploli Platoon” என்கிற புலனாய்வு வலையமைப்பிற்கு பொறுப்பாகவிருந்த மேஜர் பிரபாத் புலத்வத்தே இன்றுவரை பாதுகாக்கப்படுகின்றார்

விசேடமாக பிள்ளையானுக்கு அடைக்கலம் வழங்கி ராஜபக்சே குடும்பத்தின் நலன்களுக்காக இயக்கிய மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண முதல் பிரிகேடியர் அமல் கருணாசேன வரையான பிரதானிகள் பாதுகாக்கப்படுகின்றார்கள்

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக அடையாளம் காணப்படும் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே சுதந்திரமாக நடமாடுகின்றார்

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என கத்தோலிக்க திருச்சபை அடையாளம் காட்டியுள்ள பிரிகேடியர் சூலா கொடிதுவாக்கு, கேணல் அன்சார், கேணல் கெலும் மத்துமகே உட்பட்ட பிரதானிகள் என யாரும் இதுவரை விசாரணை வலயத்திற்குள் கொண்டுவரப்படவில்லை

தேசபந்து தென்னகோனின் உத்தரவின் பேரில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் ஒன்றில் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய லொறியொன்றை தடுக்காது விடுவித்தது தொடர்பாக அவரிடம் விசாரிக்கப்படவில்லை

இந்த லொறியானது கோட்டாபய ராஜபக்சவிற்கு மிக நெருக்கமான அவன்ட் கார்ட் பாதுகாப்பு சேவைக்கு சொந்தமானதாக இருந்ததாக அடையாளம் காணப்பட்டு இருந்தது தொடர்பாக நிஸ்ஸங்க சேனாதிபதியிடம் விசாரிக்கவில்லை

இதற்கிடையில் பாதுகாப்பு அமைச்சின் துணைப்படையாக மாதம்தோறும் 35 லட்சம் பிள்ளையானுக்கு அரச பொது நிதியிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கின்றது

கிழக்கின் இராணுவ முகாம்களான கபரண இராணுவ முகாம் , இருதயபுரம் இராணுவ முகாம் , வெலிங்கந்த இராணுவ முகாம் உட்பட பல முகாம்களிலிருந்து செயற்பட பிள்ளையானுக்கு அனுமதி வழங்கப்பட்டிருகின்றது

தமிழ் வர்த்தகர்கள் உட்பட பொதுமக்களை கடத்தி பணம் வசூலிக்க கோட்டாபய ராஜபக்சே அவர்கள் பிள்ளையான் உட்பட்டவர்களுக்கு அனுமதி வழங்கியமையை அமெரிக்கா தூதுவராலயம் அம்பலப்படுத்திருக்கின்றது

அதே போல கபரண உட்பட்ட இராணுவ முகாம்களில் இந்த பணம் இராணுவ அதிகாரிகளுக்கு மத்தியில் பகிரப்பட்டத்திற்கும் ஆதாரம் இருக்கின்றது

விசேடமாக ‘கன்சைட்-Gun Site’ வதை முகாம் பொறுப்பதிகாரியாக இருந்த சுமித் ரணசிங்க அவர்களுக்கு தமிழ் பெண்களை கடத்தி பிள்ளையான் வைத்த விருந்து வரை பொதுவெளியில் தரவுகள் உண்டு

இது தவிர வெளிநாடுகளிருந்து இராணுவ புலனாய்வாளர்களுக்கு பணியாற்றும் புளொட் அமைப்பை சேர்ந்த ஸ்டாலின் ஞானம் உட்பட்ட இந்தியன் இராணுவ காலத்தின் ஒட்டு குழுக்களும் பிள்ளையானை பயன்படுத்திருக்கின்றன

அதாவது இராணுவம் செய்ய முடியாத வேலைகளை செய்து முடிப்பதற்கு கோட்டாபய ராஜபக்சவின் ஒழுங்கமைப்பில் இராணுவ புலனாய்வு கட்டமைப்பு பிள்ளையானை பயன்படுத்திருக்கின்றது

ஆனால் எந்த கிரிமினல் குற்ற செயல்கள் தொடர்பாகவும் கோட்டாபய ராஜபக்சே முதல் இராணுவ புலனாய்வு கட்டமைப்புயை சேர்ந்த யாரிடமும் வாக்கு மூலம் கூட பதிவு செய்யப்படவில்லை

ஆனால் தேர்தலை முன்னிட்டு மிக தெளிவாக பிள்ளையான் பேரில் சகல கணக்குகளையும் எழுதி முடிக்க தென்னிலங்கை தயாராகி விட்டது

சொந்த இலாபங்களுக்காக வேறு தரப்புகளிடம் தங்கள் சொந்த இனத்தை விலை பேசியவர்கள் அந்த தரப்புகளின் தேவைகள் முடிவடைய அவர்களாலேயே பலியிடப்படுவார்கள் என்பதற்கு பிள்ளையான் நவீன சான்றாகி இருக்கின்றார்.

-அனைத்துலக சிந்தனைப்பள்ளி-

பகிர்ந்துகொள்ள

Leave a Reply