முல்லைத்தீவு கடலில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சுருக்குவலை மற்றும் ஒளிபாய்ச்சி மீன்பிடித்தல் போன்ற சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கோரி- வட்டுவாகல் பாலத்தில் இருந்து கோட்டபாய கடற்படை முகாம் வரை பேரணியாகச் சென்ற மீனவர்கள் அங்கு கடற்படை முகாமை முற்றுகையிட்டு தங்கள் கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த கடற்தொழில் அமைப்புக்கள் ஏற்பாடு செய்த இந்த கவனயீர்ப்பு போராட்டநடவடிக்கையின்போது முல்லைத்தீவு கடலினை நம்பி 5ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.
இந்த நிலையில் சாலை தொக்கம் கொக்கிளாய் வரையான கடற்பரப்பில் சுருக்குவலை ஒளிபாச்சி மீன்பிடித்தல் போன்ற சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இதனால் மீனவர்களின் வலைகள் அறுக்கப்படுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் சிறுமீன் இனங்கள் அழிக்கப்படுகின்றன.
மீனவர்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை இலங்கை கடற்படையினர் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கடற்தொழில் அமைச்சர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்ப்டட தீர்மானத்திற்கு அமைய காவல் அரண்களை அமைத்து கட்டுப்படுத்தி தருமாறும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இந்த நிலையில் கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளை தளபதிற்கும் கோட்டபாய கடற்படை முகாம் தளபதிற்கும் மீனவர்கள் மனு கையளித்துள்ளனர். கடற்தொழில் அமைச்சருக்கும் விடயத்தினை தெரியப்படுத்தி முடிவு சொல்லப்படும் என அறிவித்துள்ளதை தொடர்ந்து மீனவர்கள் கலைந்து சென்றுள்ளார்கள்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)