கோட்டா வீட்டுக்குப் போ என்ற கோஷத்துடன் காலிமுகத்திடலில் நேற்று முன்தினம் ஆரம்பித்த மாபெரும் போராட்டம் இன்றும் தொடர்ந்து வருகிறது
ஏராளமான மக்களின் பங்குபற்றுதலுடன் மழைக்கு மத்தியிலும் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. கோட்டா வீட்டுக்குப் போகும் வரை நாங்கள் வீட்டுக்குப் போகமாட்டோம் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
தொடர்ச்சியாக மூன்று நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் உணவு, குடிதண்ணீர் மற்றும் குடிபானங்களை வழங்கி வருகின்றனர்.
போராடும் மக்களுக்காக வைத்தியர்களும் இலவச வைத்திய சேவைகளை வழங்கி வருகின்றனர். அதேவேளை, போராட்டக்காரர்களுக்கு மெத்தைகள் மற்றும் நகரும் கழிப்பறைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்காலிக கூடாரங்களும் அமைக்கப்பட்டள்ளன
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)