கோட்டாபய ராஜபக்சவை பிரதமராக்க வேண்டும் என்று சிலர் தெரிவிக்கின்றனர். அது அவர்களின் தேவை, ஆனால் அவருக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்குவதற்கு நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்ல என ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
கடந்த இரண்டரை வருடங்கள் தனது அனுபவங்களை அல்ல இலங்கையர்களின் எதிர்காலத்தையே கோட்டாபய அழித்துள்ளார்.
கொவிட் தொற்றுநோய் பரவியதன் போது வெளிநாடுகளில் தொழில் மற்றும் வர்த்தகத்தை இழந்தவர்கள் தமது நாட்டுக்கு வருவதற்கு தடை விதித்த ஒரே அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன்னைச் சுற்றியிருந்த சிலரை கொழுக்க வைப்பதற்காகவே இவ்வாறான தீர்மானங்களை அவர் மேற்கொண்டதாகவும் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச எடுத்த சில தீர்மானங்கள் முட்டாள்தனமானவை என்பதால் அவரை மீண்டும் நம்பக்கூடாது என உதயங்க வீரதுங்க வலியுறுத்தினார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.