கோத்தாவை எதிர்த்து கொந்தளித்த மங்கள!

You are currently viewing கோத்தாவை எதிர்த்து கொந்தளித்த மங்கள!

உலகின் ஏனைய நாடுகள் குற்றமிழைத்த இராணுவ வீரர்களுக்கு தண்டனை வழங்கி இராணுவத்தினரின் நன்மதிப்பைப் பாதுகாக்கும். ஆனால் இலங்கையில் எண்மரைப் படுகொலை செய்த மரண தண்டனைக் கைதிக்கு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்படுகிறது. இதுவே இலங்கையின் நிலை”

இவ்வாறு முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கடுமையாகச் சாடியுள்ளார்

மிருசுவில் படுகொலை குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க நேற்று (26) பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று (27) மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பகிர்ந்துகொள்ள