இலங்கை திரும்பும் கோத்தபாயவை கைது செய்ய கோரி யாழ்ப்பாணம் எங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இலங்கை புலனாய்வை திணர விட்ட சுவரொட்டியை யாழ் நகர் எங்கும் பரவலாக ஒட்டிய தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை மீது கவனம் திரும்பியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியும் தமிழ் இனப்படுகாலையாளியுமான கோட்டபாயவை சிங்கப்பூர் அரசு கைது செய்ய வேண்டும் என்ற சுவரோட்டியை யாழ் நகர் எங்கும் பரவலாக இரவோடு இரவாக ஒட்டித்தள்ளியுள்ளார்கள் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையினர்.
இந்த சுவரோட்டி தமிழர் தாயகம் கடந்து முழு இலங்கை, தமிழகம், புலம்பெயர் தேசம்வரை பாரிய தாக்கத்தை கோட்டபாயவிற்கும் அவரை காப்பாற்ற நினைக்கும் அனைத்து தரப்பினருக்கும் ஏற்படுத்தும் என்பது பலரது கருத்தாக உள்ளது.
